
கடந்த மூன்று ஆண்டுகளில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடத்தை பெண்களே பெற்று வருகின்றனர். 2010 ஆண்டுத் தேர்வில் சென்னையைச் சேர்ந்த திவ்ய தர்ஷினியும், 2011-ஆம் ஆண்டுத் தேர்வில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படித்த ஷேனா அகர்வாலும், 2012 ஆண்டுத் தேர்வில் திருவனந்த புரத்தை சேர்ந்த ஹரிதா வி. குமாரும் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். இது இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்தை காட்டுகிறது.