Saturday 13 April 2013

பாராமெடிக்கல் படிப்பு - ராமச்சந்திரா பல்கலை கழகம் அறிவுப்பு



ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக்கழகத்தில், பாராமெடிக்கல் படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலையில் பி.பார்ம், பி.எஸ்சி.,(நர்சிங், உடற்கல்வி, அலைடு ஹெல்த் சயின்ஸ், பயோ-மெடிக்கல் சயின்ஸ்), பி.ஏ.எஸ்.எல்.பி ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றது.


இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் +2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 முதுகலைவில் எம்.பார்ம், எம்.பி.டி, எம்.எஸ்சி.,நர்சிங், எம்.பி.ஏ.,ஹாஸ்பிடல் அன்ட் ஹெல்த் சிஸ்டம் மேனஜ்மென்ட், எம்.பி.எச்., ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றது.
 
இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு மே 26ம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.sriramachandra.edu.in/university/pdf/admissions/ugandpg_2013.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...