Thursday 11 April 2013

கணிதத்தை காதலிப்போம்..


இன்றைய சூழலில், ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கானது என்பதுபலரது கருத்தாக உள்ளது. இதன் காரணமாக கணிதப் பிரிவில்ஆர்வமுள்ள மாணவர்கள் கூட, பிளஸ் 2 முடித்ததும் கல்லூரியில்கணிதப் பிரிவில் விருப்பமில்லாமல் சேர்கின்றனர். ஒருமாணவருக்கு இயல்பாக எதில் ஆர்வமோ, அந்த துறையைதேர்ந்தெடுத்தால் முழு ஈடுபாட்டோடும், விருப்பத்தோடும் படித்து அத்துறையில் முன்னேற முடியும்.

ஏனெனில், இன்றளவும் அதிக வாய்ப்புகளை உள்ளடக்கி, அமைதியாக முன்னேறிக் கொண்டிருக்கும் துறை கணிதம் தான். அடிப்படையில் கணிதம், "பியூர் மேத்தமெடிக்ஸ்" மற்றும் "அப்ளைடு மேத்தமெடிக்ஸ்" என்ற பிரிவுகளாக அமைகிறது.

பணிகள்

* கணிதத் தியரி, கம்ப்யூடேஷனல் டெக்னிக், அல்காரிதம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி என்று பல்வேறுபயன்பாடுகளை கணிதவியலாளர்கள் உபயோகித்து பொருளாதார, அறிவியல், இன்ஜினியரிங், இயற்பியல்மற்றும் வணிகச் சேவைகளை தருகிறார்கள்.


* கணிதம் படித்தவர்கள், ஆசிரியர்களாக செல்வதைத் தான் பொதுவாகக் காண்கிறோம். கணிதத்தில் பட்டமேற்படிப்பு முடித்திருப்பவர்கள், பொருளாதார நிபுணர்கள், இன்ஜினியர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், இயற்பியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள்.


* தொழில் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் கணிதத் திறன் பெற்றவர்கள், கிரிப்ட் அனலிஸ்டுகளாக பணியாற்றுகிறார்கள்.

எங்கு வேலைவாய்ப்பு?

கணிதத் துறையில் பணி பெற வேண்டும் என்று விரும்புவோர், அதில் பி.எச்டி., வரை படித்தால், விரும்பிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசுத் துறையில், பாதுகாப்புப் பிரிவில் கணிதம் பயின்றவர்களுக்கு, எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. சாப்ட்வேர் பப்ளிஷிங் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஏரோஸ்பேஸ் மற்றும் பார்மாசூடிகல் நிறுவனங்களிலும் கணிதம் பயின்றவர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பட்ட மேற்படிப்பு முடித்திருந்தால் போதும்.

நல்ல கல்வி நிறுவனங்களில் படித்தால் நல்ல வேலை கிடைக்கும். ஐ.டி., மட்டுமே எதிர்காலம் அல்ல;எல்லாத் துறைகளிலுமே வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனம்

தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, பி.எச்டி., வரை கணிதப் படிப்பு வழங்கப்படுகிறது. சில கல்லுõரிகளில் பி.எஸ்சி., (மேத்தமெட்டிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்) பி.எஸ்சி., (மேத்தமெட்டிக்ஸ் மற்றும் இயற்பியல்) எம்.எஸ்சி., (அப்ளிகேஷன் ஆப் மேத்தமெட்டிக்ஸ்) போன்ற படிப்புகளும் வழங்கப்படுகின்றன. கணிதத்திற்கு சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனமாக "சென்னை மேத்தமெட்டிகல் இன்ஸ்டிடியூட்" திகழ்கிறது.

இங்கு படிக்க விரும்புவோர், காண வேண்டிய இணையதளம்: www.cmi.ac.in

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...