Thursday 18 April 2013

கணினி வழிக் கல்வி-கைப்பணத்தில் கிராமத்து ஆசிரியர் சேவை



புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர். 
அவரது செலவில், பொது அறிவு, பாட சம்பந்தமான "சிடி' க்களை வாங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு, அது குறித்த தகவல்களை "சிடி' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்; பொது அறிவு "சிடி' க்களும் காட்டப்படுகிறது. 
 
ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினியில், "மவுஸ்' கையாளுதல், கூட்டல், கழித்தல் கணக்கு போடுதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. உணவு நேரத்திற்குப் பின், "டிவி' மூலம் "டிஸ்கவரி சேனல்' ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் வனங்கள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்களை பற்றியும் அறிந்து கொள்கின்றனர்.
 
 "ஸ்போக்கன் இங்கிலீஸ்' கற்று கொடுக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் கூறுகையில், ""அறிவியலின் வளர்ச்சி, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புத்தகப் படிப்போடு, உலகம் பற்றிய அறிவை, மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுக்கப்பட்ட "சிடி' க்களும் உள்ளன. மாணவர்களே "சிடி' யை போட்டு, பாடத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொடுக்கிறோம்,'' என்றார். 
 
வாருங்கள் வாழ்த்துவோம்....

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...